திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). லாரி டிரைவர் இவரது தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக அறிந்து சிவக்குமாரை தம்பி தேவேந்திரன் பட்டப் பகலில் வயலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சிவகுமார் இன்று மதியம் தனது தந்தை வீட்டின் அருகில் மது அருந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நான்கு பேருடன் கொண்ட கும்பல் சிவக்குமாரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு வெளியே வந்தபோது சிவகுமாரை ஓட ஓட பொன்னேரி வெள்ளகுளம் சாலையில் விரட்டியது இரண்டு பக்கமும் வழிமறித்ததால் கும்பல் தன்னை வெட்ட வந்த கும்பலிலிருந்து தப்பித்துக் கொள்ள அருகில் உள்ள வயல்வெளி விவசாய நிலத்தில் ஓட முயன்ற போது விவசாய நிலத்தில் விரட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக தலையை வெட்டிய போது தடுத்ததால் இரண்டு கையில் வெட்டப்படன.
பின்னர் தடுமாறு கீழே விழுந்ததில் தலை மற்றும் கழுத்து சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்தம் வழிந்தோடிய நிலையில் துடிதுடித்து இறந்து விட்டார் சம்பவ இடத்திலிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடியது இதனிடையே தேவேந்திரன் என்பவர் பொன்னேரி காவல் நிலையத்தில் சரவணன் அடைந்து தனது அண்ணனை கொலை செய்ததாக தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த போலீசார் உதவி ஆணையர் சபாபதி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து தடயங்களை சேகரித்து விசாரணை செய்த நிலையில் தேவேந்திரனிடம் முதற்கட்ட விசாரணை செய்த போது எனது மாமியார் ஜானகி என்பவருக்கும் தனது அண்ணன் சிவக்குமாருக்கும் நீண்ட காலம் முறையில்லாத தொடர்பு இருப்பதாகவும் இதனை பலமுறை தனது அண்ணனிடம் அறிவுரை கூறியும் எச்சரித்தும் கேட்காததால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தேவேந்திரனுடன் சேர்ந்து கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தகாத உறவில் ஏற்பட்ட பிரச்சனையில் பட்டப் பகலில் தனது அண்ணனை ஓட ஓட விரட்டி வயல்வெளியில் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட சிவகுமாருக்கு கோமதி என்ற மனைவியும் ஐஸ்வர்யா என்ற பெண் உள்ளது.இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. மில்டன்