திண்டுக்கல்: திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனா (எ) மீனாட்சி(25). என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP. சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர்கள் முனியாண்டி, சூரியகலா மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சீலப்பாடியை சேர்ந்த கோபி(26). காளிமுத்து(23). ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது இருவரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















