திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்தக்காரர் முருகன் நேற்று கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி பகுதியில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுகிடந்தார் இது தொடர்பாக சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்த குமரகுரு மகன் வீரபத்திரன்(34). மேற்கு அசோக் நகரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணகுமார்(38). செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜா(41). ரவுண்ட் ரோடு புதூரை கான்முகமது மகன் ஷேக்பரீத்(29). கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் சங்கர்(33). R.M.காலனியை சேர்ந்த மகேந்திரன் மகன் விஜய்(28). மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(26). மற்றும் அசோக்(26). ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா