திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் அப்துல் லத்தீப் என்பவர் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து கொலை குற்றவாளியை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர்,சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி,விசுவாசம், சக்திவேல் மற்றும் CCTV தலைமை காவலர்கள் ஜான் சுரேஷ்குமார்,செல்விஆகியோர் இணைந்து பல்வேறு CCTV camera-களை ஆய்வு செய்தனர்.
இதில் அப்துல் லத்தீப் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (39), என்பவர் என தெரியவந்தது.இதையடுத்து யோகேஸ்வரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.