திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளி, விராலிமலை பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் கைது செய்த நத்தம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் படி நத்தம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















