மதுரை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு காவலர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பாக நோய் தடுப்பு சாதனங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் கோபிகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு தா.ச.அன்பு IPS அவர்கள் காவலர்களுக்கு நோய்த்தடுப்பு சாதனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் காவலர்கள் கலந்துகொண்டு நோய் தடுப்பு சாதனங்களை பெற்றுக்கொண்டனர்…
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி