திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57). என்பவர் (30.11.2025) அன்று தனது கடையின் முன்பு, ஒரு கைப்பையில் ரூ. 2,50,000/- பணம் கேட்பாரற்று நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அந்த கைப்பையை எடுத்து, சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். பின் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சேரன்மகாதேவி, ரயில்வே லைன் தெருவை சேர்ந்த மாரியப்பன் (30). என்பவர் தவறவிட்டது என தெரியவந்து, அவரை காவல் நிலையம் வரவழைத்து உரிய முறையில் அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன். இ.கா.ப, கிருஷ்ணனை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















