திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் (65). என்பவர் முக்கூடல் பேருந்து நிலையத்தில் கீழே கேட்பாரற்று கிடந்த கைப்பை ஒன்றை கண்டெடுத்து திறந்து பார்த்த போது அதில் ரூ. 48,500 பணம் இருந்துள்ளது. அப்பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து சேரன்மகாதேவி காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்தப் பணத்தை தவறவிட்ட ஆலங்குளம், புதுபட்டியை சேர்ந்த செல்வகுமாரியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப, முருகனை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்