திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி கிழக்கு ரத வீதியை சேர்ந்த ராஜ சுப்பிரமணியம் (50), (01.10.2024) அன்று திருவழுதீஸ்வரர் சிவன் கோவில் சன்னதி முன்பு கீழே கிடந்த 39.500 கிராம் தங்க செயினை கண்டெடுத்து அதை உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஏர்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., ராஜ சுப்பிரமணியத்தை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்