திருநெல்வேலி : கடந்த (25.09.2025) அன்று காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் சாலையில் விட்டு சென்ற, ரூ.19,900/- பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பணத்தை பணகுடியை சேர்ந்த பிரவீன் ராஜா (32). என்பவர் கண்டெடுத்து உரிய நபரிடம் சேர்க்க பணகுடி காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர், ராஜா ராமிடம் நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.,சிலம்பரசன். இ.கா.பா, பிரவீன் ராஜாவை (06.11.2025) அன்று நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















