தென்காசி: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் (15.02.2024) அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சாலையோரம் கீழே கிடந்த சுமார் 2,50,000/- ரூபாய் மதிப்பிலான 05 பவுன் தாலி செயினை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் குமார் மற்றும் அவரது மனைவியின் நேர்மையை பாராட்டும் விதமாக இன்று (18.02.2024) அன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார்.