திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் சரகத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் கடந்த ஒரு வார குடிநீர் பிரச்சனை இருந்து வந்ததால் அப்பகுதி மக்கள் 07.04.2022 இன்று பத்தமடை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை காவலன்(NK) இருசக்கர ரோந்து காவலர் திரு.இசக்கிமுத்து, அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேற்படி சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை விரைந்து அணுகி அவர்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் கூறி நிறைவேற்றவதாக பேசி, சாலைமறியலை தவிர்த்து போக்குவரத்தை சீர் செய்த காவலர் திரு. இசக்கிமுத்துவை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.