நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த வடக்கு காருக்குறிச்சி பாறையடி தெருவை சேர்ந்தவர் திரு.இசக்கிமுத்து 52. இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவிவ லதா. இவர்களுக்கு மருதுபாண்டி, இந்துமதி என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இசக்கி முத்து, நெல்லை டவுன் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இசக்கிமுத்து, குடும்ப தகராறு காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை இசக்கிமுத்து தனது சொந்த ஊரான வடக்கு காருக்குறிச்சிக்கு சென்றிருந்தார்.
அப்போது, வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் அங்கு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இசக்கிமுத்துவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.