திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் சரகம் காமாட்சிபுரம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த (15.03.2023)-ம் தேதி காலை 02.45 மணியளவில் பாலகிருஷ்ணன் (56) மற்றும் சதீஷ் என்பவருடன் ரூ.11,50,000/- பணத்தை லாரியில் வைத்துக்கொண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் லாரியை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, அப்போது அடையாளம் தெரியாத நான்கு குற்றவாளிகள் கருப்பு நிற இன்னோவா காரில் அவர்களை பின்தொடர்ந்து வழிமறித்து லாரிக்குள் புகுந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியும் சதீஸ்குமாரை அரிவாளால் தாக்கியும் லாரியில் வைத்திருந்த ரூ.11,50,000/- பணத்தையும் சதீஸ்குமார் வைத்திருந்த ரூ.15,000/- |பணத்தையும் செல்போன்களையும் கொள்ளையடித்து காரில் தப்பி சென்றனர்.
இது குறித்து |திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இச்சம்பவம் சம்மந்தமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், அவர்களது உத்திரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரகு (46), முருகன் (42) சதீஷ்குமார் (31),
சதீஷ்குமார் (31), ரவி அமல்தாஸ் கிரி ஆகியோரில் 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகளை கைது செய்தும் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் ரூ.10,00,000/- த்தையும் செல்போன்களையும் மீட்டும் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையினர்
தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.