திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,
நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான
கனரக வாகனங்கள் இந்த திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் தினந்தோறும் வந்து செல்கின்றன, இந்த நிலையில் திருவெற்றியூர் முதல் மீஞ்சூர் பொன்னேரி சாலைகளில் ஆங்காங்கே சாலையோரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டுஓட்டுநர்கள் சென்று விடுகின்றனர்.
வாகன நிறுத்த வளாகத்தில் லாரிகளை. நிறுத்தாமல் சாலையில் வாகனங்களை நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில்
அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது எனவும் இது குறித்து ஓட்டுநர்கள்,மற்றும் லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து காவலர்கள் மற்றும் மீஞ்சூர் போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாததால் போக்குவரத்து ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆலோசனின் படி, போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி மேற்பார்வையில், போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் தலைமையில், எஸ்ஐ கள் மற்றும் போலீசார் திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளின் ஓட்டுனர்களை தேடி பிடித்து ஆயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதித்தனர் ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களில் ரசீதை அதில் வைத்துச் சென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு