திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சர்விஸ் சாலையில் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை சார்பில் அனுமதி வழங்கியுள்ளனர். சமீபத்தில் பெய்த பெரும் மழையால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வல்லூர் முதல் மீஞ்சூர் வரை மிகவும் சேதமடைந்து வாகனங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை அறிந்த ஆவடி காவல் ஆணையர் மற்றும் இணை ஆணையர்,துனை ஆனையர் உள்ளிட்டவர்களின் உத்தரவின் பேரிலும்,ஆணையர் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் டி.சோபிராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் வாகன நெரிசலை தவிர்க்க இனி கனரக வாகனங்களை சர்வீஸ் சாலையிலும் பயணிக்க அனுமதித்தது. அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். இதனால் கனரக வாகனங்களும் தங்கு தடை இன்றி செல்வதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு