மதுரை: மதுரை, சிலம்பட்டியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து நெகிழி சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கிலும், நெகிழ இல்லா மாநிலத்தை உருவாக்கும் வண்ணம் நெகிழி சேகரிப்பு இயக்கத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது., இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மற்றும் சாரணர் இயக்க மாணவர்கள் இணைந்து நெகிழி சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர் மன்ற தலைவர் சகுந்தலா இணைந்து நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து உறுதி மொழி எடுத்த பின் விழிப்புணர்வு பேரணியை கொடியைத்து துவக்கி வைத்தனர். உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய இப் பேரணி மதுரை சாலை, தேவர் சிலை, பேரையூர் சாலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் முன்பு நிறைவுற்றது, தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி