திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், பேரூராட்சியின் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயல் அலுவலர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர் சுகன்யா வெங்கடேசன், மோகன்ராஜ், ஏ.சி. ராஜேந்திரன், ஏ.கே.சுரேஷ், கதிர்வேல், ரயில்வே காவல் அதிகாரி கங்காதரன்.மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு