தருமபுரி : தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் கடந்த 26 ஆம் தேதி இரும்பு பொருட்கள் திருடப்பட்டதாக நூற்பாலை மேலாளர் பொம்மடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடேசன், மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் பொம்மிடியைச் சேர்ந்த மூர்த்தி (32) ரஞ்சித் (44) தமிழரசன் (33) ஆகியோர் நூற்பாலையில் இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.