திருநெல்வேலி: ஹோட்டல் கடை காரரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மானூர் பல்லிகோட்டையை சேர்ந்த மாடசாமி என்பவருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு. மேற்படி மாடசாமி மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. மற்றொரு எதிரி ராஜகோபாலை நீதிபதி அவர்கள் 1 ஆண்டு நன்னடத்தை பிணையில் விடுவித்தார். வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்று கொடுத்த சிவந்திபட்டி காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.