திண்டுக்கல் : திண்டுக்கல் தேனி ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் திண்டுக்கல் அழகுபாண்டி,தேனி கதிரேசன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பிக்கப் வாகனத்தில் நூதன முறையில் மீன் பெட்டிக்குள் 60 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் ராரா (37), என்பவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிக்கப் வாகனம் மற்றும் 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.