பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் இந்தியர் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் சத்திய பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சொத்துவரி உயர்வு, பெட்ரோல், டீசல், எரிவாய் உருளை மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநில அமைப்பாளர் சத்திய பிரபு உள்ளிட்ட 12 பேரை பெரம்பலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.