திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு வங்கி KYC update செய்யும்படி வந்த link ஐ கிளிக் செய்தவுடன் அவர் வங்கி கணக்கில் இருந்து 40,000/-திருடப்பட்டு விட்டதாக ஆன்லைன் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி அவர் இழந்த ரூபாய் 40,000/- பணத்தை மீட்டு (09.11.2022) திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. புஷ்பராஜ், அவர்களால் பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் இழந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணம் நேரில் ஒப்படைக்கப்பட்டது.