இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் ஆயுதப்படை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள்.