திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கம் மற்றும் அணைகள் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று வருகிறது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் இறங்கி குளிப்பது, துணிகளை துவைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தும் வருகின்றனர் இதனைத் தவிர்க்கும் விதமாக அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சண்முகலட்சுமி, அவர்களது தலைமையிலான காவல்துறையினர் அணை மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவூர் அணைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞர்களை எச்சரித்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.