மயிலாடுறை: மயிலாடுறை காவேரி ஆற்றில் அதிக அளவு நீர்வரத்து உள்ளதாலும், மேட்டூர் அணையில் இருந்து 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால்,கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் அறிவுரையின்படி மாவட்ட ஆட்சியர் திரு.A.P. மகாபாரதி, IAS ., அவர்களும் மயிலாடுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா அவர்களும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக நீர்வரத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டும், வட்டாட்சியர், உதவி இயக்குனர் (மீன்வளத்துறை), துணை இயக்குனர் (கால்நடை துறை), இணை இயக்குனர் (வேளாண்மை துறை) ஆகியோர்களுடன் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மயிலாடுறை மாவட்டத்திற்கு பேரிடர் மீட்பு பணிக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்துள்ள பேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு பாதுகாப்பு குறித்து விளக்கியும், அவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினர் 120 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெறும் தகவலின்படி சம்மந்தப்பட்ட இடத்திற்கு பேரிடர் மீட்புக் குழுவுடன் உடனடியாக சென்று மீட்பு பணி மேற்கொள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், பொதுமக்கள்,
குழந்தைகள் ஆற்றுக்கு குளிக்க செல்ல வேண்டாம், கால்நடைகளை ஆற்றின் கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம், ஆடிப்பெருக்கு (3.8.24)அன்று காவிரி துலாக் கட்டத்தில் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடத்தில் தான் இறங்கி குளிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மீட்பு தொடர்பாக அவசர தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டறை இலவச தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிற்கும், மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டறை 04364 – 240100 மற்றும் அலைபேசி எண் 9442626792 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.