திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூர் முடக்குப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (90), இவர் வீட்டின் அருகே 60 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மீது ஏறினார். இதனையடுத்து அங்கிருந்த வாலிபர்கள் சிலர், தொட்டியின் மேல் ஏறி அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கருப்பன் கீழே இறங்கி வர மறுத்து விட்டார். அதேநேரத்தில், கீழே விழுந்து விடாத வகையில் கருப்பனை அவர்கள் பாதுகாப்பாக பிடித்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொட்டியின் மீது ஏறினர். ஒரு வலையில் கருப்பனை அமர வைத்து கயிறு கட்டி அவரை பத்திரமாக கீழே இறக்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா