திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகே தென்னம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் கிராவல் மண் எடுத்ததால் குளத்தில் 20 அடி முதல் 50 அடி வரை ஆழமுள்ள குழிகள் தோன்றின. மழை பெய்ததால் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தென்னம்பட்டி சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் நிஷாந்த்(13). இவர் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் நிஷாந்தின் உடலை விட்டனர் வடமதுரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா