திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கொலை வழக்கில் வீரமணி(26). என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வீரமணி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த2 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து புறநகர் DSP. சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கும்பகோணத்தில் தலைமறைவாக பதுங்கி இருந்த வீரமணியை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா