திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2011 -ம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்ட களக்காடு, கீழ துவரைகுளத்தை சேர்ந்த ஜெயகுமார் (45). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். மேற்படி குற்றவாளி நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 7 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜெயகுமாரை வள்ளியூர் காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் (05.11.2024) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்