திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு (20.12.2024) அன்று திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய மாயாண்டி, (25). என்பவர் PSJ நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த பொழுது நீதிமன்ற வாசலில் மர்ம நபர்கள் அவரை வெட்டி கொன்று விட்டு தப்ப முயலும் பொழுது நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர், உய்க்காட்டான் ஒருவரை விரட்டி பிடிக்க மற்றவர்கள் தப்பி சென்று விட்டனர்.
அவரை விசாரித்த போது அவர் பாளையங்கோட்டை கீழநத்தம் வடக்கூரை ராமகிருஷ்ணன்(25). என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், இறந்த மாயாண்டிக்கு கடந்த 2023 ஆம் வருடம் நடந்த கொலையில் தொடர்பு இருந்ததால் முன்விரோதத்தில் நடந்தது தெரிய வந்தது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த சிவா(19). மகேஷ்(21). மனோராஜ்,(27). முத்துகிருஷ்ணன்(22). ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரனை நடைபெற்றுவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்