கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு. நெல்லை நீதிமன்றக் கொலை மற்றும் ஓசூரில் வழக்கறிஞர் தாக்குதலுக்கு பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி காவல் துறையினர் சோதனை செய்து மட்டுமே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதி வழங்கினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்