தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (05.03.2026) நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை சோதனை செய்யவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் காவல்துறையினருக்கு அவர் அறிவுரைகள் வழங்கினார்.
















