திருநெல்வேலி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் இன்று முதல் (23.12.2024)ஆம் தேதி) திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆணையர் தலைமையில், காவல் ஆய்வாளர்,(துப்பாக்கியுடன்), இரண்டு உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள் மற்றும் 03 ஆயுதம் ஏந்திய காவலர்கள் நீதிமன்ற வளாக பாதுகாப்பு பணியிலும், நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன், 05 இருசக்கர ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியிலும் உள்ளன.
மேலும் மாநகரத்தில் கூடுதலாக 06 வாகன சோதனை இடங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வோரு இடத்திலும் காவல் ஆய்வாளர் (துப்பாக்கியுடன்) தலைமையில், 04 காவலர்கள் கேமராவுடன் வாகன சோதனைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவலர்களுக்கு, பணிபுரியும் இடத்திலோ, பொது மக்களுக்கோ, ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் காவலர்கள் துப்பாக்கியை உபயோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்