திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு தினமும் ஏராளமான குற்றவாளிகள், வழக்குகளுக்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மற்றும் வழக்கறிஞர்கள் வந்து செல்கிறார்கள். சமீபத்தில் நீதிமன்றம் முன்பு நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பிறகு நீதிமன்ற வளாகத்திற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி,இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல்துறையினர் நீதிமன்ற வளாகம், திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை உள்ளிட்டவற்றை ட்ரோன் கேமராவை (24.03.2025) அன்று பறக்க விட்டு கண்காணித்தனர். தினமும் இந்தக் கண்காணிப்பு தொடரும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்