தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கு இன்று (28.08.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், நீதிமன்ற அலுவல்புரியும் காவல்துறையினர் வழக்கின் நீதிமன்ற கோப்புகளை சிறந்த முறையில் கையாள வேண்டும்,
சாட்சிகளை காலதாமதமின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைவாக முடிக்கவும், வழக்குகளின் கோப்புகளை காலதாமதமின்றி நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு சென்று குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுதர விரைவாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டும் என்று நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இந்த அறிவுரை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரேமானந்தன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜெரால்டின் வினு, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.