திண்டுக்கல்: திண்டுக்கல், மருதாணி குளம் அருகே கடந்த 2020-ம் ஆண்டு வீரபாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் கண்ணன்(29), துரை சிங்கம்(63) ஆகிய 2 பேரை நகர் மேற்கு காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வி. ஜமுனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது விசாரணையில் கண்ணன், துரைசிங்கம் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜமுனா தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா