தென்காசி : தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம், செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஆலங்குளம் உரிமையியல் நீதிமன்றம், சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.