சென்னை : நெசப்பாக்கம், பாரதி நகர், பெரியார் தெருவைச் சேர்ந்த செந்தில் குமார். இவரது மகன் ஹரிஹரன், (4), இச்சிறுவனின் அத்தை, மேற்கு கே.கே., நகர் அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராமு என்பவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சிறுவன் ஹரிஹரன் தன் அத்தையுடன், வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றார். அங்கு, வீட்டு உரிமையாளரின், இரு குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம், உள்ள நீச்சல் குளம் அருகே விளையாடி உள்ளனர்.]
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஹரிஹரன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்தான், அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுவன் இறந்தது தெரியவந்தது. இது குறித்து கே.கே., நகர் காவல் துறையினர், விசாரிக்கின்றனர். சிறுவன் உயிர் பலிக்கு காரணமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளம், போதிய பராமரிப்பு இன்றியும், காவலாளி இன்றியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்.