மதுரை: மதுரை மாவட்டம். செக்கானூரணியில் சிவசக்தி திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழ்மை நிலையிலுள்ள மொத்தம் 42 நபர்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. V. பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் உசிலம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திரு. ராஜன் அவர்கள் மற்றும் செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் திரு . ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி