திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெபா நகர் பகுதியில் 6 சென்ட் நிலத்தை முதியவர் ஒருவர் கடந்த 1990 ஆம் ஆண்டு கிரய ஆவணம் அடிப்படையில் வாங்கியுள்ளார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் இறந்துவிட்டதாக போலியாக இறப்புச் சான்றிதழ் மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளதாக முதியவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரிக்கப்பட்டு வந்தது.
அதில், கிடைத்த தகவல் அடிப்படையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் ஹுசைன், மீரான் மைதீன், சுடலை, இரு பெண்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகர பகுதியில் போலியான ஆவணங்கள் தயார் செய்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கவும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்