திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த ஆதிலெட்சுமி, என்பவருக்கு கொண்டாநகரத்தில்ரூபாய் 6 இலட்சம் மதிப்புள்ள 3¾ சென்ட் இடம் உள்ளது.
இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது கணவர் இடத்தின் பத்திரத்தை அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். இதனை பயன்படுத்தி சந்திரசேகர் அந்த இடத்தை வேறொரு நபருக்கு கிரையம் செய்து உள்ளார். இதனை அறிந்த ஆதிலெட்சுமி தனது நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்ணபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி.தனலெட்சுமி. அவர்கள் தலைமையிலான முதல் நிலை காவலர் திரு.கணேசன், திரு.சண்முகம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ரூபாய் 6 இலட்சம் மதிப்பிலான நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளரான ஆதிலெட்சமி அவர்களுக்கு 30.12.2021 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 6 இலட்சம் மதிப்புள்ள நிலத்தினை மீட்டு நிலத்தினை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் , இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.