குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில்,குளச்சல் மார்த்தாண்டம் ஆகிய நான்கு இடங்களில் அனைத்துமகளிர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.
இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் காதல் வழக்கு, வரதட்சணை வழக்குகள், போக்ஸோ வழக்குகள் உள்ளிட்ட பெண்கள் சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மகளிர்போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளை விரைவாக முடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஏ.டி.எஸ்.பி திரு.வேல்முருகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளை கேட்டறிந்தார்.
மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்,சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.












