திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையை சேர்ந்தவர் இப்ராம்ஷா. (47). அவருக்கு கொண்டாநகரம் பகுதியில் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கர் 50 செண்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை தாழையூத்து, நாரணம்மாள்புரத்தை சேர்ந்த நமச்சிவாயம் (63). என்பவர் போலி ஆவணம் தயார் செய்து அதை ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து இப்ராம்ஷா திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.பா.,விடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், சம்பத்துக்கு உத்தரவிட்டதின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து நமச்சிவாயத்தை தேடிவந்த நிலையில் (15.11.2024) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















