திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு மாயனேரி, வடக்கு தெருவை சேர்ந்த சுடலை மணிக்கும், (56). அவரது சகோதரருக்கும் இடையே நிலப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக (06.11.2024) அன்று சுடலைமணி வீட்டில் இருந்த போது அங்கு வந்த சுடலைமணியின் சகோதரர் மகனான முத்துகிருஷ்ணன் (27). அவரை அவதூறாக பேசி வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை கல்லால் தாக்கி சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து சுடலைமணி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முருகேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முத்துகிருஷ்ணனை (07.11.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்