சென்னை : சென்னையில், தொடர் குற்றச்சம்பவங்களில், ஈடுபட்டு வந்த 14 பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல் துறையினர் , கைது செய்தனர். சென்னை, எண்ணுாரைச் சேர்ந்தவர்கள் சுபாஷ், (37), வினோத் (37), இருவரும் சேர்ந்து அப்பகுதியில் மற்றொருவருக்கு, சொந்தமான நிலத்தை அபகரித்த, வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமீர், கோட்டக்கல் உமர், (41), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விக்னேஷ், 22, ராயப்பேட்டையை சேர்ந்த, ஹரிஷ், (22), உள்ளிட்ட 14, பேர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தாண்டில் இதுவரை, 107 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.