திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், தனது விவசாய மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்காக தடையில்லா சான்று பெற முயன்றார். இதற்காக பள்ளபட்டி கிராம நிர்வாக அலுவலர் (VAO) சத்யா (56). மற்றும் புரோக்கர் சாந்தகுமார் (44). ஆகியோர் ரூ.4,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி நாகராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லஞ்சமாக ரூ.4,000 பெற்றுக்கொண்டிருந்த சத்யா மற்றும் சாந்தகுமாரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















