திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிலுக்குவார்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் பயணம் செய்த பிரேமா என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,06,200 பணம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

சி. செந்தாமரைக்கண்ணன்
















