சேலம்: பொதுத்துறை நிறுவனங்களில் முன்னணி எண்ணெய் நிறுவனம் ஆயில் இந்தியா இந்த நிறுவனத்தின் மீது தற்போது சைபர் அட்டாக் நடைபெற்றுள்ளதாக ஆயில் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பல சர்வர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஹேக்கர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகள் மொத்தமாக முடங்கியுள்ளது.இந்த சைபர் தாக்குதலை நடத்தியவர்கள் 54 கோடி ரூபாய் வரை ஆயில் இந்திய நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். இந்த சைபர் தாக்குதலில் இருந்து மீண்டு வர ஆயில் இந்தியா அதிகாரிகள் மட்டுமில்லாமல் வெளிப்புற அதிகாரிகளும் செயல்பட்டு வருவதாக ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது.