கடந்த சனிக்கிழமை கிழமை (21-3-2026) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22-3-2026) ஆகிய இரண்டு நாட்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே மற்றும் எதிரில், தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகிலும் ரம்ஜான் பண்டிகை தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் 400 நபர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 250 நபர்களுக்கும் மற்றும் ஆலப்பாக்கம் பகுதியில் 100 நபர்களுக்கும் மதிய உணவாக சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெரியோர்கள், சிறியவர்கள் என 750 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, இனிப்பு மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சமூக சேவை பிரிவு வடக்கு மண்டல பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா ஏற்பாடு செய்து வழங்கினார்.


















